ஆசியான்+3 பிரதேசத்தில் உற்பத்தியின் முக்கிய மையமான சீனா

ஆசியான்+3 ஒட்டுமொத்த பொருளாதார ஆய்வு அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக, சீனா, இப்பிரதேசத்தின் உற்பத்தி வலையமைப்பில் முதன்மை மையமாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினியோகத் துறையைப் பார்க்கும் போது, முன்பு ஜப்பானை மையமாக கொண்ட உற்பத்தி வலையமைப்பு, தற்போது சீனாவை மையமாக கொண்டுள்ளது. இத்தகைய வினியோக சங்கிலி சீனாவை ஒரு திசையாகச் சார்ந்திருக்காமல், ஒன்றை ஒன்று சார்பை அடிப்படையாக கொள்கிறது. மேலும், தேவை துறையைப் பார்க்கும் போது, கடந்த 20 ஆண்டுகளாக, ஆசியான் நாடுகள், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் உள் தேவை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து, உலகளாவிய இறுதி தேவையின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிரவும், இப்பிரதேசத்தில் அதிகரித்து வரும் நேரடியான அன்னிய முதலீடு, வர்த்தகம் மற்றும் உற்பத்தி உறவுகளை பூர்த்தி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author