பெருநிலப் பகுதி கடலோர காவற்துறை கின்மென் அருகிலுள்ள கடல் பரப்பில் ரோந்துப்பணி நியாயமானது

கின்மென் பகுதிக்கு அருகிலுள்ள கடல் பரப்பில் சட்டத்தின்படி சட்ட அமலாக்கம் மற்றும் ரோந்து பணிகளை ஃபுஜியான் கடலோரக் காவற்துறை 26ஆம் நாள் மேற்கொண்டது என்றும், இதில், அணிவகுப்பு பயணித்தல், அடையாளம் சரிபார்த்தல், எச்சரிக்கை அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ​​முக்கிய கடல் பகுதிகள் மீதான கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட்டன என்றும், சீன கடலோர காவற்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தைவான், பெங்கு, கின்மென், மாட்சு ஆகியவை அனைத்தும் சீனாவின் பகுதிகளாகும் என்றார். தொடர்பான கடல் பரப்பில் சட்ட அமலாக்கம் மற்றும் ரோந்து பணிகளை சீனப் பெருநிலப் பகுதியின் கடலோரக் காவற்துறை மேற்கொள்வது சட்டபூர்வமாகவும் நியாயமாகவும் உள்ளது. கடலில் பணி செய்வதன் ஒழுங்கைப் பராமரிக்கவும், இருகரை மீனவர்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உறுதி செய்யவும் இது உதவும் என்றும், இந்நடவடிக்கைகளுக்கு உறுதியாக ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author