டிடிஇ-யிடம் வாக்குவாதம் செய்த பயணி… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!!! 

Estimated read time 1 min read

இந்திய இரயில்வேயில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இருந்தும், சிஸ்டத்தில் அந்தப் பயணி ‘வருகை புரியவில்லை’ என்று காட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேள்வி கேட்ட பயணியிடம், அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் மிகவும் பொறுப்பற்ற முறையிலும், திமிர்த்தனமாகவும் பதில் அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“>

இந்தச் செயலுக்குப் பின்னால் டிக்கெட் மோசடி அல்லது ஊழல் ஏதேனும் இருக்கலாம் என்று பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களுக்குப் பெரும் சிரமத்தை தருவதோடு, இரயில்வே நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சமூக வலைதளப் பயனர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

You May Also Like

More From Author