முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ (Zoho), இந்தியத் தொழில்துறையினரின் தேவைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘Zoho ERP’ என்ற புதிய மென்பொருளை இன்று (ஜனவரி 23, 2026) கும்பகோணத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை SAP, ஆரக்கிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென்பொருள்களை மட்டுமே நம்பியிருந்த இந்திய நிறுவனங்களுக்கு, இது ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்று Zoho தெரிவித்துள்ளது.
நிதி மேலாண்மை, பில்லிங், சப்ளை செயின், பேரோல் (Payroll) உள்ளிட்ட அனைத்து வணிக தேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் இருந்து உலகிற்கு! Zoho நிறுவனத்தின் புதிய ‘Zoho ERP’ அறிமுகம்
