தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு!! 

Estimated read time 1 min read

தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வந்ததால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன்படி 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 4-ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author