இனி ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் போட்டி கிடையாதா? பிசிசிஐ ஆலோசிக்கும் ஷெட்யூல்  

Estimated read time 1 min read

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோடைகாலத் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) டி20 தொடரின் கால அட்டவணையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றைச் செய்ய இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஆலோசித்து வருகிறது.
தற்போது வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரை, இனிவரும் காலங்களில் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களுக்கு மாற்ற பிசிசிஐ பரிசீலித்து வருவதாக ஐபிஎல் கவர்னிங் கவுன்சில் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கடுமையான கோடை வெயில், வீரர்களுக்கு ஏற்படும் அதீத சோர்வு மற்றும் 2028-ஆம் ஆண்டு முதல் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது ஆகியவையே இந்த ஆலோசனையின் முக்கியக் காரணங்களாகும்.

You May Also Like

More From Author