காசா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸின் இராணுவப் பிரிவின் புதிய தளபதியான முகமது ஓதே கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அவருக்கு முந்தைய தளபதி இதேபோன்ற தாக்குதலில் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஓதே கொல்லப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்று நடந்த இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு, மேலும் பலர் காயமடைந்தனர்.
காசா நகரின் மிகவும் பரபரப்பான சந்தைப் பகுதிகளில் ஒன்றில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தை இந்தத் தாக்குதல் குறிவைத்தது.
ஹமாஸ் இராணுவப் பிரிவின் புதிய தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
