சீனாவின் மிக பெரிய பாறை எண்ணெய் வயல் உற்பத்தி

சீனாவின் கடல் பரப்பில் உள்ள மிக பெரிய ஆழம் குறைந்த பாறை எண்ணெய் வயலான கேன் லீ 10-2 எண்ணெய் வயலின் முதல் கட்ட உற்பத்தி பணி முழுவீச்சில் தொடங்கியது. இதில் நாள் ஒன்றுக்கு 2800 டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. சீனாவின் மிக பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி தளமான போ ஹாய் எண்ணெய் வயலின் நிலையான உற்பத்திக்கு, இது முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

கேன் லீ 10-2 எண்ணெய் வயல், சீனாவின் போ ஹாய் கடலின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு சராசரி நீர் ஆழம் சுமார் 20 மீட்டர் உள்ளதுடன், தரைக்கடி எண்ணெய் படிவு, 10 கோடி டன்னைத் தாண்டக் கூடுமென மதிப்பிடப்படுகிறது.

You May Also Like

More From Author