14ஆவது சீன-பிரிட்டன் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை சீனாவின் ஜியாங்சு மாநிலத்தின் யாங்சோ நகரில் மே 26ஆம் நாள் துவங்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறையின் அமைச்சர் லியூ ஹாய்சிங், பிரிட்டன் அமைச்சரவையின் முன்னாள் முதன்மைச் செயலாளர் லிடிங்டன் உள்ளிட்ட இரு நாட்டு அதிகாரிகள், அறிஞர்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினர்களாக 60க்கும் மேலானோர் இதில் கலந்து கொண்டனர்.
சீனாவும் பிரிட்டனும் நீண்டகாலமாக நிதானமான பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை வளர்ப்பது, இரு நாடுகளுக்கும் உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துக்களைச் செவ்வனே செயல்படுத்தி, திறப்பான ஒருங்கிணைப்பான எழுச்சியுடன், கருத்து வேற்றுமையை உரிய முறையில் கையாண்டு, ஒன்றுக்கு ஒன்று நலன்தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, சர்வதேச விவகாரங்கள் பற்றிய பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டு வளர்ச்சி மற்றும் உலக அமைதியையும் நிதானத்தையும் முன்னேற்ற வேண்டும் என்றும் இரு தரப்பினரும் தெரிவித்தனர்.
