கசகஸ்தானில் சாவ் லேஜீ அதிகாரப்பூர்வ பயணம்

Estimated read time 1 min read

சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் தலைவர் சாவ் லேஜீ மே 25 முதல் 27ஆம் நாள் வரை கசகஸ்தானில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அஸ்தானா நகரில், கசகஸ்தான் அரசுத் தலைவர் டோகாயேவ், அந்நாட்டு செனெட் அவை தலைவர் அஷிம்பாயேவ், மஜிலிஸ் அவை தலைவர் கோஷனோவ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

டோகாயேவுடன் சந்தித்த போது அவர் கூறுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் வழிக்காட்டலுடன், சீன-கசகஸ்தான் உறவு வேகமாக வளர்ச்சியடைந்து, பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை எட்டியுள்ளது என்றார். மேலும், கசகஸ்தானுடன் இணைந்து தத்தமது மைய நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

டோகாயேவ் கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை கசகஸ்தான் உறுதியுடன் பின்பற்றி வருவதோடு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த மனித குலத்தின் பொது எதிர்கால சமூகம் கருத்துகளுக்கும், நான்கு உலகளாவிய முன்மொழிவுகளுக்கும் ஆதரவளித்து வருகிறது என்றார்.

You May Also Like

More From Author