மே முதல் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பார்வையாளராக இவ்வாண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள தைவானுக்கு அழைப்பு விடுக்குமாறு உலக சுகாதார அமைப்பை அமெரிக்கா வலுவாக ஊக்குவித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் மே 2ஆம் நாள் கூறுகையில், இதனை சீனா கடுமையாக எதிர்க்கின்றது என்று தெரிவித்தார்.
உலகில் ஒரே சீனா மட்டும் உள்ளது. தைவான் சீனாவின் பிரிக்கப்பட முடியாத உரிமை பிரதேசம் ஆகும். தைவான் பிரச்சினை, சீனாவின் முக்கிய நலன்களின் மையத்தில் உள்ளது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் தாண்ட கூடாத ஒரு முக்கிய சிவப்பு கோடாகவும் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் மாநாட்டை பயன்படுத்தி தைவான் பிரச்சினையை மிகைப்படுத்தவும், தைவான் சுதந்திர சக்திக்கு தவறான சமிக்கைகளை அனுப்புவதைத் தவிர்க்கவும் அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.