14ஆவது சீன-அமெரிக்க சுற்றுலா உயர் நிலை பேச்சுவார்த்தை 22ஆம் நாள் ஷான் சி மாநிலத்தின் சி ஆனில் துவங்கியது.
சீன அரசவை உறுப்பினர் சென் யீசின் இப்பேச்சுவார்த்தையின் துவக்க விழாவில் கலந்து கொண்டு, இப்பேச்சுவார்த்தைக்கு அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அனுப்பிய கடிதத்தை வாசித்து உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், சீன-அமெரிக்க சுற்றுலா உயர் நிலை பேச்சுவார்த்தை நடத்துவது, சான் பிரான்சிஸ்கோவில் இரு நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்பில் எட்டப்பட்ட பொது கருத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கையாகும். சீன-அமெரிக்க சுற்றுலா ஒத்துழைப்பின் வளர்ச்சியை முன்னேற்றுவது உறுதி என்று சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவுடன் இணைந்து, சுற்றுலா துறை ஒத்துழைப்பை ஆழமாக்கி, மக்களிடை பரிமாற்றத்தை விரைவுபடுத்தி, பண்பாட்டு பரிமாற்றத்தை விரிவுபடுத்தி, நாகரிகத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு வழிகாட்ட சீனா விரும்புவதாகவும், பண்பாடு, கல்வி, விளையாட்டு, இளம் வயதினர் உள்ளிட்ட துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னேற்றி, சீரான, நிதானமான மற்றும் தொடரவல்ல சீன-அமெரிக்க உறவை வளர்ப்பதற்கு ஆக்கப்பூர்வ பங்காற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளின் அரசு, வாரியம், உள்ளூர் பகுதி மற்றும் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 400 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.