குஜராத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடந்த மூன்று நாட்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இறந்தவர்களில் ஏழு பேர், மோர்பி மாவட்டத்தில் நிரம்பி வழியும் தரைப்பாலத்தை கடக்கும்போது அவர்கள் பயணித்த டிராக்டர்-டிராலி அடித்துச் செல்லப்பட்டதில் காணாமல் போனவர்கள் என்று செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.
இது தவிர, ராஜ்கோட், ஆனந்த், மஹிசாகர், கெடா, அகமதாபாத், மோர்பி, ஜுனாகத் மற்றும் பருச் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் இறப்புகள் பதிவாகியுள்ளன.
குஜராத்தில் கடும் மழை: மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 18,000 பேர் வெளியேற்றம்
You May Also Like
More From Author
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்த நடிகர் சுரேஷ் கோபி
October 13, 2025
“ஆசிரியர் தகுதி தேர்வு எழுத கல்வித்துறை அனுமதி தேவையில்லை”
September 12, 2025
நெல்லையில் 50 ஆண்டுகளாக கொலு வைத்து வழிபடும் பக்தர்!
September 23, 2025
