சீன-அமெரிக்க இளைஞர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்

கடலில் கூட்டுப் பயணம்:சீன-அமெரிக்க இளைஞர்களின் நட்பு பயணம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு நாட்டு மாணவர்களுக்கு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 23ம் நாள் பதில் கடிதம் அளித்தார்.

அக்கடிதத்தில் ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-அமெரிக்க நட்புக் கதை, இரு நாட்டு மக்களால் எழுதப்பட வேண்டும். அதோடு, சீன-அமெரிக்க உறவின் எதிர்காலம், இரு நாட்டு இளைஞர்களால் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலதிக சீன-அமெரிக்க இளைஞர்கள், இரு நாட்டு நட்பு இலட்சியத்தை தொடர்ந்து வலுப்படுத்தி, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு, கூட்டாக முன்னேறி, பசிபிக் கடலைத் தாண்டிய நட்புத் தூதர்களாக, இரு நாட்டு உறவின் நிலையான மற்றும் சுமுகமான வளர்ச்சிக்குப் பதிய பங்கு ஆற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author