இருதரப்பின் வர்த்தக உறவை ஐரோப்பிய ஒன்றியம் பன்முக முறையிலும் புறநிலையாகவும் எதிர்கொள்ள வேண்டும்: சீனா

 

இருதரப்பின் வர்த்தக உறவை ஐரோப்பிய ஒன்றியம் பன்முக முறையிலும் புறநிலையாகவும் எதிர்கொள்ள வேண்டும்: சீனா

சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வை சீரமைக்கும் வகையில் இறக்குமதி ஒதுக்கீடுகளையும் சுங்கவரிகளையும் உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் 28ஆம் நாள் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவை பன்முக முறையிலும் புறநிலையாகவும் எதிர்கொண்டு, தாராள வர்த்தகத்திற்கான வாக்குறுதியை பின்பற்ற வேண்டும் என்றார்.

மேலும், சீனா ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளை உற்று கவனித்து, தனது நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author