சீன வாகனத் தொழில் சங்கத்தின் புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜுலை வரை, சீன வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை, முறையே 1 கோடியே 82.35 இலட்சம் மற்றும் 1 கோடியே 82.69 இலட்சத்தை எட்டியது.
இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 12.7 மற்றும் 12 விழுக்காடு அதிகரித்தது. இவற்றில் மின்னாற்றல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை, 82.32 இலட்சம் மற்றும் 82.2 இலட்சத்தை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 39.2 மற்றும் 38.5 விழுக்காடு அதிகம். மின்னாற்றல் வாகனங்களின் விற்பனை அளவு, புதிய வாகனங்களின் மொத்த விற்பனையில் 45 விழுக்காட்டுப் பங்கு வகித்தது என்று தெரிவிக்கப்பட்டது.
வாகன ஏற்றுமதியில், மின்னாற்றல் வாகனம், வாகன ஏற்றுமதி அதிகரிப்பை முன்னெடுக்கும் உந்து சக்தியாக மாறியுள்ளது. ஜனவரி முதல் ஜுலை வரை, மின்னாற்றல் வாகனங்களின் ஏற்றுமதி எண்ணிக்கை, 13.08 இலட்சத்தை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 84.6 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
படம்:VCG