ஆப்கான் கிரிக்கெட் அணி 2026 ஜூன் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திங்கட்கிழமை (மார்ச் 2) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தொடரில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு இவ்விரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.
