சுந்தர் சி விலகலுக்கு பிறகு கமல்ஹாசன் குறித்து குஷ்பு கருத்து  

Estimated read time 1 min read

சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) பங்கேற்ற நடிகை குஷ்பு சுந்தர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோரை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்த குஷ்பு, கமல்ஹாசனை சினிமாவின் என்சைக்ளோபீடியா என்று புகழ்ந்துள்ளார்.
விமான நிலைய ஷட்டிலில் கமல்ஹாசன் மற்றும் சுஹாசினி மணிரத்னத்துடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்களை குஷ்பு சுந்தர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கமல்ஹாசனுடன் மிகவும் கலகலப்பான முறையில் உரையாடியதையும், ஒருவருக்கொருவர் பாசத்தைப் பரிமாறிக்கொண்டதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.

You May Also Like

More From Author