அமெரிக்காவின் பல்வேறு துறையினர்களுடன் வாங்யீ கலந்துரையாடல்

Estimated read time 1 min read

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பவையின் உயர்நிலை கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கிய காலத்தில், மே 27ஆம் நாள் அமெரிக்காவின் நெடுநோக்கு, தொழில் மற்றும் வணிகத் துறையினர்களுடன் அவர் கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில், சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் அண்மையில் பெய்ஜிங்கில் வரலாற்றுத் தன்மை வாய்ந்த பேச்சுவார்த்தை நடத்தினர். சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியும், அமெரிக்காவின் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவது என்னும் நடவடிக்கையும் ஒன்றை ஒன்று முன்னேற்றி, உலகத்துக்கு நன்மை புரிய முடியும் என சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் தெரிவித்ததாகக் கூறினார்.

மேலும், அமெரிக்காவுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்தக் கருத்துக்களைச் செயல்படுத்தி, சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு நிலைத் தன்மை வாய்ந்த உறவை வெகுவிரைவில் நடைமுறைக்குக் கொண்டு வருவதை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்கத் தரப்பினர் கூறுகையில், சீனப் பொருளாதாரம் வலிமையான உறுதித்தன்மை மற்றும் உயிராற்றலை வெளிப்படுத்தி வருகிறது. அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் சீனச் சந்தையின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதோடு, சீனாவில் முதலீட்டை விரிவுப்படுத்துவதை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author