பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இருக்குமா  

Estimated read time 0 min read

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்து வருகிறது. இதனால் உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயருமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்திருக்கிறது. இது தொடர்பாக அரசுத் தரப்பிலிருந்து சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அதன்படி இந்தியாவில் தற்போது தேவையைச் சமாளிக்கும் வகையில் போதிய அளவில் பெட்ரோல் டீசல் இருப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக பெட்ரோல் டீசல் விலைகள் உயருமோ என மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

You May Also Like

More From Author