ஜூலை 6-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக ஆலோசனை மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அதிரடியாக விலகி தவெகவில் இணைந்துவருகின்றனர்.
தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/HZO3OlOwDW
— AIADMK (@AIADMKOfficial) July 2, 2026
அதிமுகவிலிருந்து பலரும் தவெகவிற்கு செல்லும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 6-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக ஆலோசனை மேற்கொள்கிறார். மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 6-ம் தேதி தஞ்சை, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். 9-ம் தேதிவரை எந்தெந்த மாவட்டங்களுடன் ஆலோசனை என்ற பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
