சிந்திக்க சில வரிகள் ! கவிஞர் இரா .இரவி
வெள்ளை வேட்டியைவாயில் வைத்து
சிகரெட் புகையை ஊதுங்கள் வேட்டியில்
கருப்பாக கறை படியும் .அந்தக் கறை
எத்தனை முறை துவைத்தாலும் ,
வெளுத்தாலும் போகாது .அது போலதான்
நுரையீரலிலும் கறை படிந்து நோய் பெருகும் .
சிகரெட்புகைத்து விட்டு படுத்தால்தான்
தூக்கம் வரும் என்பார் ஒரு நண்பர் ..
இரவுப் பணி புரியும் ஒரு நண்பர் .
சிகரெட் புகைத்தால்தான் தூக்கம்
வராமல் வேலை செய்ய முடியும் என்பார்.
மனம்தான் காரணம் ஒரே சிகரெட்
ஒருவருக்கு தூக்கம்
ஒருவருக்கு விழிப்பு எப்படித் தரும் .?
சிந்தியுங்கள் சிகரெட் விடுங்கள்
சிந்திக்க சில வரிகள்.
You May Also Like
More From Author
நாளை முதல் தண்ணீர் பாட்டில்களின் விலை குறைகிறது
September 21, 2025
ஆட்டம் கண்ட ஐடி ஊழியர்கள்…! அதிரித்த AI ஆதிக்கம்…
August 14, 2025
