கோயில் திருவிழாவை ஒட்டி தேவராட்டம் கோலாகலம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தேவராட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

மஞ்சநாயக்கன்பட்டி, போடுபட்டி உள்ளிட்ட கிராமங்களின் குலதெய்வமாக ஸ்ரீபூர்ணகலை புஷ்பகலை சமேத அய்யனார் திருக்கோவில் கருதப்படுகிறது.

இக்கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா பக்தர்களின் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவை ஒட்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற தேவராட்டம் உறுமி மேளத்துடன் கோலாகலமாக நடத்தப்பட்டது.

You May Also Like

More From Author