தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற 32ஆவது ஏபெக் உச்சி மாநாட்டில் பங்கெடுத்தபோது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 31ஆம் நாள் பிற்பகல் தாய்லாந்து தலைமையமைச்சர் அனுடின் சார்ன்விரகுலுடன் சந்திப்பு நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு சீன-தாய்லாந்து தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். புதிய தொடக்க புள்ளியில், இரு தரப்பும் சீன-தாய்லாந்து பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தின் ஆழமான மற்றும் நடைமுறை வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
மேலும், இணைய சூதாட்டம் மற்றும் தொலைப்பேசி மோசடி போன்ற எல்லை கடந்த குற்றங்களை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளை அதிகரித்து, இரு நாட்டு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                                     
                             
                                                 
                                                 
                                                