சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷேக் முகமது சீனப் பயணம் இரு நாட்டுறவின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகம், சீனாவுக்கு முக்கியமான பன்முக நெடுநோக்குக் கூட்டாளியாகத் திகழ்கிறது.
தொலைநோக்குப் பார்வையில் இரு நாட்டுறவு பற்றி ஆலோசிப்பதுடன், இரு நாடுகளிடையே பன்முக நெடுநோக்குக் கூட்டுறவின் சீரான மற்றும் வளமான வளர்ச்சியை உறுதி செய்ய சீனா ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது என்றும் ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில், ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முன்னதாக, சீனாவில் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவும், சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலைக் கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்கவும், ஷேக் முகமது மே 29ஆம் நாள் சீனா வந்தடைந்தார்.