கார் வாங்கப் போறீங்களா? அதிரடியாக குறைந்த டெஸ்லா கார் விலை – ரூ.9 லட்சம் தள்ளுபடியுடன் புதிய மாடல் அறிமுகம்!  

Estimated read time 1 min read

இந்தியாவில் மின்சார வாகன விற்பனையை முறைப்படுத்தவும், வாடிக்கையாளர்களைக் கவரவும் டெஸ்லா நிறுவனம் தனது மாடல் Y காரின் ஆரம்ப விலையை ரூ.9 லட்சம் வரை அதிரடியாகக் குறைத்துள்ளது.
இதன்படி, ரூ.50.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் ‘மாடல் Y பிரீமியம் ரியர்-வீல் டிரைவ்’ (Premium RWD) என்ற புதிய வேரியண்ட்டை அந்நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.
இதனுடன், கடந்த ஆண்டு இந்தியச் சந்தையில் களமிறக்கப்பட்ட இரண்டு பழைய மாடல்களின் விற்பனையைத் டெஸ்லா நிறுவனம் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக முழுமையாக நிறுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, புதிய பிரீமியம் RWD மற்றும் கடந்த மாதம் அறிமுகமான எல் பிரீமியம் AWD (6-சீட்டர்) ஆகிய இரண்டு வேரியண்ட்டுகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

You May Also Like

More From Author