பாரிஸ் ஒலிம்பிக்கின் நினைவு சிற்பம் பிரான்ஸில் பூர்த்தியாக்கப்பட்டது

Estimated read time 1 min read

சீன ஊடக குழுமம், பிரான்ஸ் தேசிய ஒலிம்பிக் மற்றும் விளையாட்டுக் கமிட்டிக்கு நன்கொடையாக வழங்கிய “ஒரே படகில் பயணிப்பது” என்னும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான பெரிய ரக நினைவு சிற்பத்தின் பூர்த்தியாக்க நிகழ்ச்சியும், “ஒலிம்பிக் அமைதி பூங்கா” திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சியும் செப்டம்பர் 6ஆம் நாள் பிரான்ஸின் நோய்சி லே கிரான்ட் நகரின் கதாலா கோட்டையில் நடைபெற்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறை துணை தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியுங் இந்நிகழ்வுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
இக்கடிதத்தில் ஷென் ஹாய்சியுங் கூறுகையில், சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 60ஆம் ஆண்டை நினைவு கூர்ந்து பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த அன்பளிப்பு, கதாலா கோட்டையில் பூர்த்தியாக்கப்பட்டது, “அமைதி, நட்புறவு மற்றும் முன்னேற்றம்” என்ற ஒலிம்பிக் விளையாட்டின் உன்னத கண்ணோட்டத்தை இது வெளிப்படுத்துகிறது. சீனா மற்றும் பிரான்ஸின் பல்வேறு துறையினர்கள் தொடர்ந்து ஒலிம்பிகை சங்கிலியாக கொண்டு, வேறுபட்ட நாகரிகங்களுக்கிடையேயான பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையை முன்னேற்றி, பன்னாட்டு மக்களிடையேயான புரிந்துணர்வு மற்றும் மதிப்பை விரைவுபடுத்தி, பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்துக்கு புதிய பங்காற்ற எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author