சீன சுங்கத்துறை பொது நிர்வாகம் 9ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 20.68 லட்சம் கோடி யுவானாகும். கடந்த ஆண்டை விட இதன் வளர்ச்சி விகிதம் 15.3 சதவீதமாக உயர்ந்த நிலையில், நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களை விட 0.4 சதவீதப் புள்ளிகள் அதிகமாகும்.
சீன சுங்கத்துறை பொது நிர்வாகத்தின் புள்ளிவிவர பகுப்பாய்வு பிரிவின் தலைவர் லியூ டாலியாங் கூறுகையில், இவ்வாண்டு முதல் அரசுத் தலைவர்களின் தூதாண்மை கொள்கையின் வழிகாட்டலின் கீழ், உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக கூட்டாளிகளுடனான நடைமுறை ஒத்துழைப்பை சீனா ஆக்கப்பூர்வமாக ஆழப்படுத்தி வருகிறது என்றும், இது சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக இயக்கத்தில் நிலையான ஆற்றலை செலுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில், ஆப்பிரிக்க நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 18.2 சதவீதம் அதிகரிப்புடன் 1.14 லட்சம் கோடி யுவானை எட்டியது. வரலாற்றில் இதேகாலகட்டத்தில் இது முதன்முறையாக 1 லட்சம் கோடி யுவானைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
