சிங்கப்பூரில் 3 நாட்கள் நடைபெற்ற 23வது ஷங்கரிலா பேச்சுவார்த்தை அண்மையில் நிறைவடைந்தது. இப்பேச்சுவார்த்தையில், உலகின் பாதுகாப்பு சவாலை எதிர்கொண்டு, ஒரு புறம், சீனப் பிரதிநிதிகள் உலகளாவிய நிர்வாகம் மற்றும் பாதுகாப்புக்கான முன்மொழிவுகளை விளக்கிக் கூறினர். அமைதியைப் பேணிக்காத்து, ஒத்துழைப்பை முன்னெடுக்கும் சீனாவின் கருத்துக்கள், பொது வரவேற்பைப் பெற்றுள்ளன. இன்னொரு புறம், ஜப்பான் பிரதிநிதிகள், மறு இராணுவமயமாக்கத்துக்காகச் சூதுவாதம் செய்வது, தென் சீன கடலின் செயல்பாட்டு விதிகளை வகுக்கும் முக்கியத்துவத்துக்கு பிலிப்பைன்ஸ் சவால் விடுப்பது முதலிய செயல்கள், பல தரப்புகளால் குற்றம் சாட்டப்பட்டன.
ஷங்கரிலா பேச்சுவார்த்தை, மேலை சிந்தனை கிடங்கான பிரிட்டன் சர்வதேச நெடுநோக்கு ஆய்வகத்தால் நடத்தப்பட்டது. அதில் ஆசிய-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்கள் முக்கியமாக விவாதிக்கப்படுகின்றன. இவ்வாண்டில் 44 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர்.
நடப்பு பேச்சுவார்த்தைக்கு முன், சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் பெய்ஜிங்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை மேற்கொண்டனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹெக்செஸ் ஷங்கரிலா பேச்சுவார்த்தையில், அமெரிக்க-சீன உறவு, கடந்த பல ஆண்டுகள் முதல் மிக சிறந்த நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.
4 உலகளாவிய முன்மொழிகளை முன்வைத்த சீனா, நெடுநோக்கு பார்வையுடன் பெரிய நாடுகளிடையிலான உறவின் நிதானத்தை நிலைநிறுத்தப் பாடுபட்டு வருகிறது. சர்வதேச அரங்கில், மேலாதிக்க எதிர்ப்பு, நியாய நாட்டம் முதலியவற்றுக்காகக் குரல் எழுப்பி வரும் சீனா, ஆசிய-பசிபிக் மற்றும் உலகின் அமைதி, நிதானம் ஆகியவற்றுக்கு நிலை தன்மை வழங்கியுள்ளது.
