பெய்ஜிங்கில் முதல் விண்வெளி கம்ப்யூட்டிங் தொழிற்துறைப் புத்தாக்க மையத்தின் நிறுவல் திட்டம் அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெய்ஜிங் ஹைதியான் மாவட்டத்திலுள்ள பெய்ஜிங் செயற்கைக் கோள் வட்டத்தில் இது கட்டியமைக்கப்படும்.
இம்மையத்தில், தொழில் நுட்ப ஆய்வு, பரிசோதனை, சாதனை மாற்றம் முதலியவற்றை ஒருங்கிணைக்கும் முழு சங்கிலித் தொழிற்துறைச் சேவை திறம் உருவாக்கப்படும். தற்போது, ஹைதியான் மாவட்டத்தில், வணிக விண்வெளிப் பயணம், செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டிங் சில்லு, 6G தகவல் தொடர்பு முதலிய முன்னணி நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க தளங்கள் இதில் உள்ளன. விண்வெளி கம்ப்யூட்டிங் எதிர்காலத் தொழிற்துறையை வளர்க்கும் உறுதியான அடிப்படையை இப்பிரதேசம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
