மே 22ஆம் நாள் மாலை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அழைப்பை ஏற்று பிரான்ஸின் அரசுத் தலைவர் மக்ரோனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
இதில் ஷி ச்சின்பிங் கூறுகையில்,
கடந்த மே திங்கள் நான் பிரான்ஸில் பயணம் மேற்கொண்டேன். சுதந்திரமான ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, தொலைநோக்கு பார்வையில், ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெரும் சீன-பிரான்ஸ் தூதாண்மை எழுச்சியை வெளிகொணர இரு நாடுகள் ஒப்புகொண்டன.
அதற்கு பிறகு இரு நாடுகளின் ஒத்துழைப்புகளில் நிறைய சாதனைகள் எட்டப்பட்டன. ஐ.நா பாதுகாப்பவை நிரந்தர உறுப்பு நாடுகளாகவும் சுதந்திரமான பெரிய நாடுகளாகவும் சீனா மற்றும் பிரான்ஸ் திகழ்கின்றன.
இரு நாடுகள் ஒத்துழைப்பு மேற்கொண்டு ஐ.நாவின் தகுநிலையைப் பேணிக்காத்து, உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஐரோப்பாவுடன் இணைந்து உலக அறைகூவல்களைச் சமாளித்து, இருதரப்புக்கும் உலகிற்கும் நன்மை புரியும் சாதனைகளை எட்ட சீனா விரும்புகின்றது என்றார்.