ஜம்மு-காஷ்மீர் : பாக். எல்லையோர மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை!

Estimated read time 1 min read

பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்க்கால சூழல் ஒத்திகை நடைபெற்றது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

முன்னதாக மே 7ம் தேதி நாடு முழுவதும் போர்க்கால சூழல் ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் ஆப்ரேஷன் ஷீல்டு என்ற பெயரில் நேற்று போர்க்கால ஒத்திகை நடத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் கட்டடங்களில் பற்றிய தீயை அணைத்து மக்களைக் காப்பாற்றுவது போல ராணுவ வீரர்கள் தத்ரூபமாக ஒத்திகை மேற்கொண்டனர்.

இதேபோல் ஸ்ரீநகர், சண்டிகர், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் மின்சாரத்தைத் துண்டித்து போர்க்கால ஒத்திகை நடத்தப்பட்டது.

You May Also Like

More From Author