சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் டிசம்பர் 27ஆம் நாள் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி, ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம் 6 இலட்சத்து 66ஆயிரத்து 748 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.7 விழுக்காடு குறைவாகும்.
இக்காலகட்டத்தில் இந்த தொழில் நிறுவனங்களிலுள்ள பெரும் பங்கு முதலீட்டைக் கொண்ட அரசு சார் தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம் 2இலட்சத்து 3ஆயிரத்து 877 கோடி யுவானாகும்.
இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.4 விழுக்காடு குறைவாகும். பங்கு முதலீட்டு முறை தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம், 5இலட்சத்து 01ஆயிரத்து 430 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.7 விழுக்காடு குறைவாகும்.
வெளிநாடுகள் மற்றும் ஹாங்காங், மக்கெள, தைவான் ஆகிய பிரதேசங்கள் முதலீடு செய்த தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம், 1இலட்சத்து 60ஆயிரத்து 629 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.8 விழுக்காடு குறைவாகும். தனியார் தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம் 1இலட்சத்து 96ஆயிரத்து 491 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.0 விழுக்காடு குறைவாகும்.
நவம்பர் திங்களில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.3 விழுக்காடு குறைவாகும்.