சிஎம்ஜிக்கும் லாவோஸின் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையே ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்து

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், லாவோஸ் அரசுத் தலைவர் தோங்லூன் ஆகியோரின் முன்னிலையில், ஜுன் 5ஆம் நாள், சீன ஊடக குழுமத்தின் தலைவர் ஷென் ஹாய்சியோங், லாவோஸின் மக்கள் புரட்சி கட்சியின் வெளிநாட்டுத் தொடர்பு துறை அமைச்சர் பென்லேவ் ஆகியோர் சீன ஊடக குழுமத்துக்கும் லாவோஸ் மக்கள் புரட்சி கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறைக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறிப்பாணையில் கையெழுத்திட்டனர். சீன ஊடக குழுமம், லாவோஸின் கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சகம், கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சகம், தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் தனித்தனியாக ஒத்துழைப்பு ஆவணத்தில் கையொப்பமிட்டது.

இந்த ஆவணங்களின்படி, நிகழ்ச்சி தயாரிப்பு, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பரிமாற்றம், மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் சீன ஊடக குழுமம் லாவோஸின் குறிப்பிட்ட வாரியங்களுடன் நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, புதிய யுகத்தில் அனைத்து நிலையிலான சீன-லாவோஸ் பொது எதிர்கால சமூகத்தின் கூட்டு கட்டுமானத்துக்குப் பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author