2019 முதல் குறைந்தபட்சம் ஒரு தேர்தலில் போட்டியிடுவது உட்பட கட்டாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதற்காக, பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை (RUPPs) பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
அரசியல் சூழலை நெறிப்படுத்துவதற்கான பரந்த தூய்மைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தலைமையில், தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ள 2,800 க்கும் மேற்பட்டவற்றில் இந்த RUPPகள் கடந்த ஆறு ஆண்டுகளில் எந்தவொரு மக்களவை, மாநில சட்டமன்றம் அல்லது இடைத்தேர்தல்களிலும் பங்கேற்கவில்லை என்பதை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.
மேலும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தக் கட்சிகளின் அலுவலகங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
நாடு முழுவதும் 345 கட்சிகளின் அங்கீகராத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை
