ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்: உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு?  

Estimated read time 0 min read

அமெரிக்க ராணுவம் ஈரானிய இலக்குகள் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்திய வான்வழித் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக, முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளதால் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் தினசரி நுகரப்படும் கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 20% இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
சவூதி அரேபியா, ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களின் ஏற்றுமதிக்கு இந்த ஒரே ஒரு பாதையையே நம்பியுள்ளன.
இதனால் இப்பாதையின் முடக்கம் உலக அளவில் பெரும் விநியோகத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.

You May Also Like

More From Author