பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் ஒரு பகுதியாக ₹3,200 கோடியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 30 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் திங்களன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இது மொத்த ₹8,000 கோடி தொகையின் முதல் தவணை மட்டுமே என்றும், பின்னர் மிச்ச தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.
30லட்சம் விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு Rs.3,200 கோடி இழப்பீடு வழங்க உள்ளது
