ஹாங்காங் தாய்நாட்டுடன் இணைந்த 28ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டங்களின் துவக்க விழா ஜூன் 30ஆம் நாள் ஹாங்காங் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லீ ஜியா சாவ் துவக்க விழாவில் கூறுகையில், இன்று ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பைப் பேணிகாப்பதற்கான சட்டம் நடைமுறைக்கு வந்ததன் 5ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 5 ஆண்டுகாலத்தில் ஹாங்காங் பொருளாதார வளர்ச்சிக்கு இயக்காற்றல் மீண்டும் எழும்பி, பொது மக்களின் வாழ்க்கையில் உயிராற்றல் ஏற்பட்டுள்ளது. ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கையின்படி பெருநிலப்பகுதியையும் வெளிநாடுகளையும் இணையும் ஹாங்காங்கின் மேம்பாட்டை வெளிக்கொணர்வதை சிறப்பு நிர்வாக அரசு தொடர்ந்து விரைவுபடுத்தும் என்று தெரிவித்தார்.
ஹாங்காங்கில் மத்திய அரசின் தொடர்பு பணியகத்தின் தலைவர் சோ ஜி துவக்க விழாவில் கூறுகையில், மத்திய அரசின் பெரும் ஆதரவு, சிறப்பு நிர்வாக பிரதேச நிர்வாக அதிகாரி மற்றும் அரசின் சிறந்த செயல்பாடு, பல்வேறு சமூக துறையினரின் கூட்டு முயற்சி ஆகியவற்றுடன், ஹாங்காங்கின் எதிர்காலம் மேலும் ஒளிவீசும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.