சென்னையில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து..!!

Estimated read time 0 min read

சரக்கு ரெயில் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, திடீரென பலத்த சத்தத்துடன் ரெயிலின் என்ஜின் தடம் புரண்டது.

சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டை நோக்கி சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் இணைக்கப்பட்டிருந்த 16 சரக்கு பெட்டிகளில் ஜல்லி கற்கள் ஏற்றப்பட்டிருந்தன.

டீசல் என்ஜின் கொண்டு இயக்கப்பட்ட இந்த சரக்கு ரெயில் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, திடீரென பலத்த சத்தத்துடன் ரெயிலின் என்ஜின் தடம் புரண்டது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட, ரெயில் என்ஜின் லோகோ பைலட் ரெயிலை நிறுத்திவிட்டு, இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மீட்பு ஊழியர்களுடன் விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக, ஜல்லி கற்கள் நிரப்பப்பட்ட 16 பெட்டிகளும் என்ஜினில் இருந்து கழற்றப்பட்டு, பின்நோக்கி பாதுகாப்பாக இழுத்து செல்லப்பட்டன.

You May Also Like

More From Author