ஷிட்சாங் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நிகழ்வில் பங்கெடுக்க, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், மத்திய பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமைத் தாங்கி, ஆகஸ்டு 20ஆம் நாள் சிறப்பு விமானத்தின் மூலம் லாசா நகரைச் சென்றடைந்தார். ஷி ச்சின்பிங் மத்திய பிரதிநிதிக் குழுவுடன் ஷிட்சாங் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. கட்சி மத்திய கமிட்டி, ஷிட்சாங் பணிக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், ஷிட்சாங்கின் பல்வேறு தேசிய இன மக்கள் மற்றும் ஊழியர்களின் மீது கவனிப்பைத் தெரிவிப்பதையும் இது வெளிப்படுத்தியுள்ளது.
ஷிட்சாங்கின் பல்வேறு தேசிய இன மக்கள், சிவப்புக் கொடிகள் மற்றும் பாரம்பரிய முறைப்படி ஹடாகளுடன் அவர்களுக்கு ஆரவாரமாக வரவேற்பு அளித்தனர்.