இனி ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் அல்லது பணம் எடுத்தால் வருமான வரித்துறைக்கு தகவல்..!

Estimated read time 0 min read

இனி ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் கணக்குகள் குறித்து தகவல் அளிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒரு நிதியாண்டில் உங்களின் அனைத்து வங்கிக் கணக்குகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ அந்தத் தகவலை வங்கிகள் வருமான வரித்துறைக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேமிப்பு கணக்குகள் உள்ள வாடிக்கையாளர், 10 லட்சத்திற்கு மேல் வரவு வைத்தாலும், பணம் எடுத்தாலும் அந்த சேமிப்பு கணக்கு குறித்த தகவலை வழங்க வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் நிலையங்களுக்கு வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரம், 10 லட்சத்திற்கு மேல் வரவு வைப்பதற்கும், பணம் எடுப்பதற்கும் வரி விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைவாக வருமானக் கணக்கு காட்டி, அதிக பணப் பரிவர்த்தணை செய்பவர்களை கண்டறிய முடியும் என வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.

You May Also Like

More From Author