சீன ஊடகக் குழுமத்தின் ஆராய்ச்சி கழகம் தொடக்கம்

சீன ஊடகக் குழுமத்தின் ஆராய்ச்சி கழகம் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹைய்சியோங், சீன சமூக அறிவியல் கழகத்தின் தலைவரும், சீன வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் தலைவருமான கோ சியாங் முதலியோர், சீ.எம்.ஜி ஆராய்ச்சி கழகம் மற்றும் முதுகலை ஆராய்ச்சியாளர் நிலையத்தின் தொடக்க விழாவில் பங்கெடுத்துள்ளனர்.

சீன ஊடகக் குழுமத்தின் துணைத் தலைவர் வாங் சியௌ ஷென் உரைநிகழ்த்துகையில்,

ஷி ச்சின்பிங்கின் முக்கிய சிந்தனை, முக்கிய கருத்துக்கள், உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றி, புதிய பண்பாட்டுக் கடமைகளுக்குப் பொறுப்பேற்கும் இன்னொரு முக்கிய நடவடிக்கையாகவே இது திகழ்கிறது என்றார் அவர். 

You May Also Like

More From Author