காபொன் புதிய அரசுத் தலைவரின் பதவி ஏற்பு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்பு தூதர் பங்கெடுப்பு

காபொன் குடியரசின் அரசுத் தலைவர் நுகுவேமாவின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு தூதரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் துணை தலைவருமான மூ ஹொங், மே 3ம் நாள் காபொன் தலைநகரில் அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் பங்கெடுத்தார். மே 4ம் நாள், நுகுவேமா, மூ ஹொங்கைச் சந்தித்துரையாடினார்.

அப்போது மூ ஹொங் கூறுகையில், சீன-காபொன் உறவின் வளர்ச்சியில் சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது. காபொன்னுடன் இணைந்து, பாரம்பரிய நட்பின் ஆற்றலை சேகரித்து, ஒத்துழைப்பு மற்றும் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, கூட்டு வெற்றியுடன் முன்னேறி, சீன-காபொன் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவைப் புதிய கட்டத்தில் நுழைய முன்னெடுக்க சீனா விரும்புகிறது என்றார்.

You May Also Like

More From Author