சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 15ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில்,
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் தொடர்புடைய திட்டப்பணிகளில் கூட்டாக ஈடுபடவும், மின்சார இணையம், நெடுஞ்சாலை, துறைமுகம், வான் சேவை முதலியவற்றின் ஒத்துழைப்புகளை நேபாளத்துடன் இணைந்து வலுப்படுத்தவும் சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
ஷிஷிர் கூறுகையில்,
ஒரே சீனா எனும் கொள்கையில் நேபாளம் எப்போதும் ஊன்றி நின்று வருகிறது. எந்த ஆற்றலும் நேபாள உரிமையைப் பயன்படுத்தும் சாக்குபோக்கில் சீனாவின் நலன்களைத் தீங்கு விளைவிப்பதற்கு நேபாளம் அனுமதி வழங்கப்போவதில்லை. சீனாவின் தொழில் நிறுவனங்களுக்கு நியாயமான, சட்டபூர்வமான, நட்பார்ந்த வணிகச் சூழலை நேபாளம் வழங்கும் என்றார்.
