22ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சி செப்டம்பர் 17 முதல் 21ஆம் நாள் வரை குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நான் நிங் நகரில் நடைபெறவுள்ளது என்று சீன வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் 8ஆம் நாள் தெரிவித்தார்.
45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3200 தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் பங்கெடுக்கவுள்ளன. செயற்கை நுண்ணறிவு அரங்கம், புதிய உயர் தர உற்பத்தி திறன் அரங்கம், நீலப் பொருளாதாரம், அந்நிய வர்த்தக சிறப்பு பொருட்கள் முதலிய காட்சியிடங்கள் புதிதாக அமைக்கப்படுகின்றன. காட்சியிடங்களின் மொத்தப் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர மீட்டர் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
