ரூ.75,000 வரை பயிர் கடன் தள்ளுபடி… தமிழக முதல்வர் விஜய் புதிய அறிவிப்பு…!!! 

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த 25.05.2026 அன்று ரூ.50,000 வரை பயிர் கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலம் முழுவதிலும் இருந்து இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் 15.06.2026 அன்று தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட மறு ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது பயிர் கடன் தள்ளுபடி வரம்பானது ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர் கடன் பெற்ற விவசாயிகளில் ரூ.75,000 வரை கடன் வாங்கியவர்களுக்கு 100% கடன் தொகையும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். அதேபோல, ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்குக் குறைந்தபட்சமாக ரூ.35,000 வரை தள்ளுபடி சலுகைப் பணப்பயன் கிடைக்கும் எனப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம், கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற ஒட்டுமொத்த விவசாயிகளும் கணிசமான பலனை அடைவதோடு, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்குப் புதிய கடன்களைப் பெறுவதற்கும் இது பெரும் உதவியாக அமையும். அரசின் இந்த புதிய விரிவாக்கப்பட்ட திட்டத்தின் கீழ், மொத்தம் 14,43,504 விவசாயிகள் பயனடைய உள்ளார்கள்.

இதற்காகத் தமிழக அரசுக்குத் தோராயமாக ரூ.5,932.23 கோடி நிதிச் செலவினம் ஏற்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 8,33,773 குறு விவசாயிகளுக்கு ரூ.3,599.67 கோடியும், 5,16,183 சிறு விவசாயிகளுக்கு ரூ.1,995.42 கோடியும், மற்றும் 93,548 இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.337.15 கோடியும் கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது என்ற விரிவான புள்ளிவிவரங்களும் இந்த புதிய அரசாணை செய்தி வெளியீட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author