ஷன் டுங் மாநிலத்தில் சீனத் தலைமை அமைச்சர் ஆய்வுப் பயணம்

Estimated read time 1 min read

சீன அரசவையின் தலைமை அமைச்சர் லீச்சியாங் பிப்ரவரி 2ம் நாள் ஷன் டுங் மாநிலத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது அவர் கூறுகையில், இவ்வாண்டு மற்றும் 15வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி பணிகள் குறித்து ஷிச்சின்பிங்கின் கட்டளைகளை ஆழமாக நடைமுறைப்படுத்தி, வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஷன் டுங் மாநிலத்தின் எரியாற்றல் கட்டுமானம் மற்றும் அணு மின் வளர்ச்சி பற்றிய நிலைமையைக் கேட்டறிந்த லீச்சியாங், புதிய ரக எரியாற்றல் அமைப்பு முறையை உருவாக்கும் வகையில், தூய்மை எரியாற்றல் திட்டப்பணி மற்றும் இயக்கப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஆய்வுப் பயணத்தின் போது, மாநிலம், நகரம், வட்டம், கிராமம் ஆகிய 4 நிலை அரசு பணியாளர்களின் கலந்துரையாடல் கூட்டத்துக்கு லீச்சியாங் தலைமை தாங்கி, நாட்டின் அரசு பணியறிக்கை, 15வது ஐந்தாண்டு திட்ட வரைவு ஆகிவற்றுக்கான முன்மொழிவுகள், அரசுப் பணிகளுக்கான கருத்துக்கள் முதலியவற்றைக் கேட்டறிந்தார்.

படம்:Xinhua News

You May Also Like

More From Author