தமிழக அரசியலில் பரபரப்பு : தி.மு.க., – பா.ஜ., கூட்டணி அமைகிறதா ?: நயினார் நாகேந்திரன் விளக்கம்..!!

Estimated read time 1 min read

திருநெல்வேலியில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற 35 நாட்களில், சட்டம் — ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருளை கட்டுப்படுத்துவதிலும் அரசு தோல்வியடைந்துள்ளது.

போலீஸ் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படாததால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. முதல்வர் விஜய், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அ.தி.மு.க., — எம்.எல்.ஏ.,க்களை விலைபேசி வாங்கி வருகிறார். குதிரைபேரம் நடத்தி பிற கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களை இழுப்பதால், தேவையற்ற இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டு, அரசுப்பணம் வீணடிக்கப்படுகிறது.

தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைக்குமா என்பது குறித்து, தேர்தல் நேரத்தில் ஆலோசித்து, முடிவு எடுத்து, அறிவிக்கப்படும். வரும் காலம் பா.ஜ.,வின் காலமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More From Author