உலகக்கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறி அமெரிக்கா அசத்தியுள்ளது,
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘GROUP D’ பிரிவில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில், அமெரிக்க வீரர் அடித்த பந்தை தடுக்க முயன்ற ஆஸ்திரேலிய வீரர் கேமரூன், துரதிர்ஷ்டவசமாக தனது சொந்த போஸ்ட்டிற்குள் பந்தை திருப்பி ‘OWN GOAL’ ஆக்கினார்.
இதனால் 11-வது நிமிடங்களிலேயே அமெரிக்கா ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் என முன்னிலை பெற்றது.
இதையடுத்து முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் அமெரிக்க இளம் வீரர் அலெக்ஸ் ப்ளீமேன் ஒரு கோல் அடித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில், கோல் அடிக்க முயன்ற ஆஸ்திரேலிய அணியின் அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா முறியடித்தது.
இதன்மூலம் 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா, நாக்அவுட் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
தனது முதல் போட்டியில் பராகுவே அணியை வீழ்த்திய அமெரிக்கா, 96 ஆண்டுகால உலக கோப்பை கால்பந்து வரலாற்றில், தனது முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதேபோல் குரூப் சி பிரிவில் ஸ்காட்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வீழ்த்தியது.
