வங்கதேச டி20 அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!

Estimated read time 1 min read

வங்கதேச டி20 அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேச அணி விளையாடவுள்ளது.

அதன்பின் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடர்களுக்கான வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2026 டி20 உலகக்கோப்பை வங்கதேச டி20 அணியின் அணித்தலைவராகச் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author